×

இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது கே.வி.குப்பம் அருகே

கே.வி.குப்பம், ஏப்.27: கே.வி.குப்பம் அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் மோகனப்பிரியன்(23). இவர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி அடிக்கடி செல்போனில் பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மேல்காவனூர் அருகில் நின்று கொண்டிருந்த அந்த இளம்பெண்ணிடம் பேசியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மோகனப்பிரியன் அந்த பெண்ணின் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு சென்றாராம். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மோகனப்பிரியனை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது கே.வி.குப்பம் அருகே appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Mani ,Mohanapiriyan ,
× RELATED கே.வி.குப்பம் அருகே அனுமதியின்றி நடந்த...