- நீர் பாண்டல்
- அஇஅதிமுக
- நாமக்கல்
- நீர்மோர் பந்தல்
- பெரியார்
- அண்ணா
- எம்.ஜி.ஆர்
- நகர செயலாளர்
- சட்டமன்ற உறுப்பினர்
- பாஸ்கர்
- தின மலர்
நாமக்கல், ஏப்.27: நாமக்கல் நகர அதிமுக சார்பில், தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலை அருகே, அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானம், தர்பூசணி பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா (எ) செல்வகுமார், மாவட்ட ஊராட்சிகுழு முன்னாள் தலைவர் காந்திமுருகேசன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கரிகலன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் குப்புசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜா, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்கள் விஜய்பாபு, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.