×

திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்

ஈரோடு, ஏப். 27: ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் வெயிலில் பக்தர்கள் நடந்து செல்லும் போது சூட்டை தணிக்கும் வகையில் தென்னை நார் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு அடுத்துள்ள திண்டல் வேலாயுதசாமி கோயிலில் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக கோடை வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க ரூ.1.20 லட்சம் மதிப்பில், தென்னை நார் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் நடைபாதையில் இந்த விரிப்புகள் போடப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மதிய நேரத்திலும் வெறும் காலில் சிரமமின்றி நடந்து செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கோடை காலம் முடியும் வரை நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்தினர் கூறினர்.

The post திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள் appeared first on Dinakaran.

Tags : Dindal Murugan Temple ,Erode ,Thindal Murugan Temple ,Dhindal Velayudasamy ,Dhindal ,Murugan Temple ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு