×

மலைக்கு புறப்பட்டார் அழகர்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 23ம் தேதி நடந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி, தல்லாகுளத்தில் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்றார். ஒவ்வொரு மண்டகப்படியாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் அழகர் மலையை நோக்கி புறப்பட்டார்.

இன்று காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க மலைக்கு வந்தடைகிறார். பக்தர்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றி, கோயில் வளாகத்திற்குள் கள்ளழகரை அழைத்து செல்கின்றனர். நாளை காலை உற்சவ சாந்தியுடன் மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.

The post மலைக்கு புறப்பட்டார் அழகர் appeared first on Dinakaran.

Tags : Alagar ,Madurai ,Chitrai festival ,Alaghar river ,Alaghar ,Bhoopallak ,Perumal ,Thallagulam ,Dinakaran ,
× RELATED சென்னை பக்தருக்காக 18 அடி ராட்சத அரிவாள்