×

பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் அடைந்து பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜவைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாஜ தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துமாணிக்கம். கடந்த 20ம் தேதி, துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜ மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில் அமர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த துரைப்பாக்கம் பாஜ துணை தலைவர் வாசு(46), 196வது வட்ட தலைவர் வெங்கட்(36), 196 வட்ட செயலாளர் ஜெயகுமார்(50), டிக்காராம் மற்றும் அவரது மகன் விக்னேஷ், மாரியம்மாள் ஆகிய 6 பேர், பூத் ஏஜென்ட் வேலை செய்ததற்கான பணம் ஏன் கொடுக்கவில்லை என்று கூறி முத்துமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக முத்துமாணிக்கம் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து வாசு, வெங்கட், ஜெயகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான டிக்காராம், விக்னேஷ், மாரியம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Athram ,Bajau district ,CHENNAI ,BJP ,BJP South Chennai ,East District ,Muthumanikam ,Durai Pakkam ,Athram Baja district ,Dinakaran ,
× RELATED பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரம்...