×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா தகுதி பெற்றார். 2வது சுற்றில் சீனாவின் ஜின்யு வாங்குடன் (22 வயது, 23வது ரேங்க்) நேற்று மோதிய கார்சியா (30 வயது, 24வது ரேங்க்) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), அனஸ்டசியா பாவ்லுசென்கோவா (ரஷ்யா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா appeared first on Dinakaran.

Tags : Madrid Open Tennis ,Garcia ,Madrid ,Caroline Garcia ,Madrid Open ,Spain ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; கார்சியாவை...