×

சில்லி பாயின்ட்…

* மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய உள்ளூர் நட்சத்திரம் ரபேல் நடால் (37 வயது), முதல் சுற்றில் அமெரிக்காவின் டார்வின் பிளான்ச்சை (16 வயது) 6-1, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 4 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 21 ஆண்டு, 117 நாள். ஏடிபி 1000 அந்தஸ்து தொடர் வரலாற்றில் இதுவே அதிகபட்சமாகும். நடப்பு சீசனுடன் நடால் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சி செய்தபோது ஆடுகள பக்கவாட்டு கேமராக்கள் உடைந்து நொறுங்கியதாகவும், அவற்றின் மதிப்பு ₹40,000 எனவும் எம்.ஐ அணி X வலைத்தள பக்கத்தில் தகவல் பதிந்துள்ளதுடன் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

* ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா (34 வயது), இளம் வீராங்கனை தனிஷா கிராஸ்டோ (19 வயது) உடன் இணைந்து களமிறங்க உள்ளார்.

* டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் காயம் காரணமாக விலகிய மிட்செல் மார்ஷுக்கு பதிலாக ஆப்கான் ஆல் ரவுண்டர் குல்பாதின் நயிப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

* 2024 ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான விளம்பரத் தூதராக இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல், தடகள நட்சத்திரம் உசேன் போல்ட் ஆகியோரும் ஏற்கனவே இந்த தொடருக்கான விளம்பரத் தூதர்களாக உள்ளனர்.

* மகளிர் சர்வதேச டி20ல் இந்தோனேசியாவின் அறிமுக வீராங்கனை ரொமாலியா ரொமாலியா (17 வயது), மங்கோலியா அணிக்கு எதிராக 3.2 ஓவரில் 3 மெய்டன் உள்பட ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட் கைப்பற்றி உலக சாதனை படைத்தார். இந்தோனேசியா 20 ஓவரில் 151/5; மங்கோலியா 16.2 ஓவரில் 24 ரன் ஆல் அவுட். மங்கோலியா தரப்பில் 6 பேர் டக் அவுட்டாகினர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Rafael Nadal ,Madrid Open tennis ,Darwin Blanc ,Dinakaran ,