×

இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர மோடியைப் போல் யாரும் தரங்கெட்ட செயலில் ஈடுபட்டதில்லை: ஜவாஹிருல்லா தாக்கு

கும்பகோணம் : மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தான் மோடியும், பாஜகவின் தலைவர்களும் பாஜகவினுடைய உத்தரவாதங்களை பற்றி பேசாமல் சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய மிகவும் மோசமான, கீழ்த்தரமான, விஷமத்தனமான கருத்துக்களை பேசி வருகின்றனர். இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவருடைய பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும்.

குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அனைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது வேட்பாளர்கள் தங்களது மனுக்களை எல்லாம் திரும்ப பெற்றுக் கொண்டு பாஜகவை சேர்ந்த ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது மிகப்பெரிய கேலிக்கூத்து. காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் மனுவில், கையெழுத்து தவறாக உள்ளது என்று கூறி நிராகரிக்கப்படுகிறது. மக்களை சந்தித்து தேர்தலை சந்திப்பதற்கு பாஜகவிற்கு அச்சம் உள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்தநிலையில் எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் எம்எல்ஏக்கள் மக்கள் பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்து எம்எல்ஏக்களின் அலுவலகங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

 

The post இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர மோடியைப் போல் யாரும் தரங்கெட்ட செயலில் ஈடுபட்டதில்லை: ஜவாஹிருல்லா தாக்கு appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Jawahirullah Thakku ,Kumbakonam ,Jawahirullah ,Humanity People's Party ,MLA ,Papanasam ,India ,Modi ,BJP ,
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!