- கல்லானி கால்வாய்
- தமிழ்நாடு அரசு
- தஞ்சை
- தமிழ்நாடு அரசு
- புதுக்கோட்டை
- பேராவூரணி
- அரந்தாங்கி
- சந்தலமல்குடி
- தின மலர்
தஞ்சை: கல்லணை கால்வாய் 2ஆது கட்ட புனரமைப்பதற்கு ரூ. 447 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. விரிவாக்கம், புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு ரூ.447 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, மணல்மேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் புனரமைப்பு பணி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத்துறை செயலர் சந்தீப் சக்சேனா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்.19-ம் தேதி நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில், கல்லணை கால்வாய் அமைப்பு முதல் கட்ட விரிவாக்கம், புனரமைப்பு மற்றும் நவீன மயமாக்கும் திட்டத்துக்காக ரூ.1,037 கோடி நிதிஒதுக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
2-ம் கட்ட பணிகள் ரூ.400 கோடியில் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்’’ என்று தெரிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர், திட்டத்துக்கான விரிவான அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பினார். அதில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.447 கோடி கோரியிருந்தார். இந்த பரிந்துரையை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, கல்லணை கால்வாய் புனரமைப்புக்கு ரூ.447 கோடி நிதியை ஒதுக்கி நிர்வாக ஒப்புதல்வழங்கியுள்ளது.
மேலும், இத்திட்டத்துக்கு முதலில் ரூ.100 கோடியை பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து பெறவும், மீதமுள்ள தொகையை பணியின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post கல்லணை கால்வாய் 2ஆது கட்ட புனரமைப்பதற்கு ரூ. 447 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.