×
Saravana Stores

அதிக சத்து நிறைந்த பழம் என்பதால் விலை உயர்ந்த போதும் செவ்வாழை விற்பனை அமோகம்

*கிலோ ரூ.55 வரை விற்கப்படுகிறது

கரூர் : அதிக சத்து நிறைந்த பழம் என்பதால், விலை உயர்ந்த போதும் செவ்வாழை அமோகமாக விற்பனையாகிறது. ஒரு கிலோ செவ்வாழை ரூ.55 வரை விற்கப்படுகிறது.
சங்ககாலப்படி முக்கனிகளில் முதன்மை கனியாக வாழைப்பழம் உள்ளது. வாழைப்பழம் மட்டுமே எல்லா தட்பவெட்ப நிலையிலும் விளையக்கூடியது. இருப்பினும் வாழைப்பழங்கள் எண்ணற்ற வகைகள் இருந்த போதிலும் செவ்வாழைக்கு தனி மவுசு உண்டு.

இந்த வாழைப்பழம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கம்பம், நாகர்கோவில், கன்னியாகுமரி, மலைப்பகுதி, சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் ,ஆகிய பகுதிகளில் அதிகமான அளவு செய்யப்படுகிறது. செவ்வாழை பலன் கிடைப்பதற்கு குறைந்தது பயிர் செய்து 20 மாதங்களாகும். மற்ற வாழைமரம் ஓராண்டு போதும்.

செவ்வாழையின் மகத்துவம் மிகவும் அதிகமானவை. உடலுக்கு வலு சேர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், உடல் எடையை உயர்த்தும், நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகிய சத்து அதிக அளவில் இருப்பதால் உடம்பிற்கு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். உடல் தேறாமல் ஒல்லியாக இருப்பவர்கள் தினசரி ஒரு செவ்வாழை சாப்பிட்டால் 40 நாள் கழித்து உடலில் நல்ல மாற்றம் கிடைக்கும். செவ்வாழைப்பழம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகப்படுத்தும்.

ஆண்களுக்கு இரவில் பாலோடு சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி போக்கி உடல் வலுப்பெறுவதோடு ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது. செரிமான மண்டலத்தை பலப்படுத்தி, உடலில் தேவையற்ற கழிவுகள் இருந்தால் அதனை மலம் வழியாக கழிப்பதற்கு ஏதுவான கனியாக அமைந்துள்ளது.பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை ஒரு கிலோ செவ்வாழை ரூ.40 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை உயர்ந்து கிலோ ரூ.55 வரை விற்பனை ஆகிறது.

சிறிய பழங்கள் ரூ.6 முதல் பெரிய பழங்கள் அதன் அளவிற்கு ஏற்றார் போல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. செவ்வாழைப்பழமானது முழு நேரம் நின்று கொண்டு பணி செய்யும் போலீசார், படை வீரர்கள், ராணுவ வீரர்கள் கண்டக்டர், செக்யூரிட்டி ஆகியோர் தினசரி 2 வாழைப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையில்லாமல் ஏற்படும் கால் வலி குறைகிறது.

கரூர் பகுதியில் பஸ் நிலையம் ராயனூர், வாங்க பாளையம், காந்திகிராமம், தான்தோன்றி மலை, பசுபதிபாளையம், கோவை ரோடு தெரசா கார்னர், புகலூர் ரோடு, சர்ச் கார்னர் முக்கிய பகுதிகளில் செவ்வாழை நான்கு சக்கர வாகனத்தில் வெளி மாவட்டங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் செவ்வாழை அதிக சத்து நிறைந்த பழம் என்பதை அறிந்து அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

The post அதிக சத்து நிறைந்த பழம் என்பதால் விலை உயர்ந்த போதும் செவ்வாழை விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து!