- 2வது
- தேர்தல்
- கேரளா
- முதல் அமைச்சர்
- பினராயி விஜயன்
- திருவனந்தபுரம்
- அம்மணில தலைவர்
- அமைச்சர்
- பினராய் விஜயன்
- கன்னூர்
- வாக்கு
- மக்களவைத் தேர்தல்
- கர்நாடக
- மத்தியப் பிரதேசம்
- உத்திரப்பிரதேசம்
திருவனந்தபுரம்: கேரளாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவை பொறுத்தவரை அங்குள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்றைய தினம் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூரில் இருக்கக்கூடிய வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். குடும்பத்தினருடன் வந்த பினராயி விஜயன், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதேபோல் கர்நாடகாவை பொறுத்தவரை 14 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் மத்திய நிதியமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் தனது வாக்கினை பதிவு செய்திருக்கிறார்.
The post மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!! appeared first on Dinakaran.