×

முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்

 

முத்துப்பேட்டை, ஏப். 26: முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தின விழா பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர் ராமசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள புத்தகங்களை வழங்கி பேசினார்.

மேலும் புத்தகத்தின் அவசியம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். இதில் பள்ளி ஆசிரியர்கள் நமசி அன்பரசு, ஆரோக்கிய அந்தோணிராஜ், இளங்கோ, முத்துலெட்சுமி, இந்திரா, அமிர்தம், மேகநாதன், செல்வகுமார், கௌதமன், டெஸ்சி ராணி, வனிதா, சங்கீதா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : World Book Day ,Muthuppettai Pudutharu Government School ,Muthuppettai ,World Book Day Festival ,Government ,Union ,Secondary ,School ,Nithayan ,Regional ,Officer ,Ramasamy ,World Book Day Celebration ,Dinakaran ,
× RELATED உலக புத்தக தின விழா