×

ஊட்டியில் குப்பைகளை சேகரிக்க 7 மினி லாரிகள்

 

ஊட்டி, ஏப். 26: ஊட்டி நகராட்சியில் குப்பைகள் சேகரிப்பதற்காக 7 மினி லாரிகள் வாங்கப்பட்டுள்ளன. ஊட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர, நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஊட்டி நகரில் நாள் தோறும் தேங்கும் பல ஆயிரம் டன் குப்பைகள், உணவு கழிவுகள் ஆகியன சுகாதாரத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு, தீட்டுக்கல் குப்பை கொட்டும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஊட்டி நகராட்சியில் போதுமான குப்பை சேகரிக்கும் சிறிய லாரிகள் இல்லாமல் இருந்தது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு குப்பைகளை வாங்குவதற்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் லாரிகள் வருவதில்லை என குற்றம் சாட்டி வந்தனர். மேலும், கவுன்சிலர்களும், அனைத்து நகராட்சி கூட்டத்திலும், அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், குப்பைகளை சேகரிக்கும் வகையிலும் சிறிய லாரிகளை வாங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, அனைத்து பகுதிகளுக்கும் சென்று குப்பைகளை சேகரிக்கும் வகையில் தற்போது ஊட்டி நகராட்சி நிர்வாகம் 7 மினி லாரிகளை வாங்கியுள்ளது. ஒரு மினி லாரி ரூ.4.75 லட்சம் வீதம் 7 லாரிகள் மினி லாரிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த மினி லாரிகளை கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் சென்று குப்பைகள் சேகரிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post ஊட்டியில் குப்பைகளை சேகரிக்க 7 மினி லாரிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Municipality ,Dinakaran ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்