×

டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது

அம்பை,ஏப்.26: அம்பை அடுத்த வாகைகுளம் சந்தி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (52). விவசாயியான இவர் கடந்த 13ம் தேதி வேளாண் பணிகளை முடித்த பிறகு டிராக்டரை வாகைக்குளம் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி சென்றார். மறுநாள் காலை திரும்பியபோது அதிலிருந்த கலப்பை கை செட் காணாமல் போனது கண்டு பதறினார். பின்னர் இது மர்மநபரால் திருடுபோனது தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்த இவர் இதுகுறித்து அம்பை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த எஸ்ஐ ஆக்னல்விஜய் மற்றும் போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஈடுபட்டது அம்பை அடுத்த கவுதமபுரி தெற்குத் தெருவை சேர்ந்த மதன்குமார் (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து கலப்பை கை செட்டை மீட்டனர்.

The post டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambai ,Murugan ,Santhi Pilliyar Kovil Street ,Vagaikulam ,Dinakaran ,
× RELATED 99 ஆண்டுகள் 4 தலைமுறையை கண்ட மாஞ்சோலைக்கு ‘குட் பை’