- சித்ரா பவுர்ணமி விழா
- வாசுதேவநல்லூர் சிந்தமனிநாத சுவாமி
- கோவில்
- சிவகிரி
- வாசுதேவநல்லூர்
- சிந்தமனிநாத சுவாமி கோயில்
- ஆர்த்தனரேஸ்வரர்
- சித்ரா பூர்ணமி
- சௌந்திரபாண்டியன்
- Mariyappan
- அர்தனரீஸ்வரர் கைங்கர்ய திருத்தோண்டலர் சமூக நலன் அறக்கட்டளை
- சித்ரகுப்தர்
- நாயனார் திருு
சிவகிரி,ஏப்.26: வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயில் (அர்த்தநாரீஸ்வரர் கோயில்) 10ம் ஆண்டாக சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அர்த்தநாரீஸ்வரர் கைங்கர்ய திருத்தொண்டர்கள் சமூகநல அறக்கட்டளை சார்பில் சவுந்திரபாண்டியன், மாரியப்பன் ஆகியோர் கோயில் முன்பு சித்திரகுப்த நாயனார் திரு ஏடு வாசித்தனர். இதைத்தொடர்ந்து மந்தை விநாயகர் கோயிலில் இருந்து சிந்தாமணிநாதர், சப்பரத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து சிவிகை நாயனார் ஷேத்ரவலம் எழுந்தருளல் நடந்தது. விழாவில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். ஏற்பாடுகளை அர்த்தநாரீஸ்வரர் கைங்கர்ய திருத்தொண்டர்கள் சமூகநல அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
The post வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம் appeared first on Dinakaran.