×

காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை

காஞ்சிபுரம், ஏப். 26: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியலில், ₹37.12 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். இதில், ₹37 லட்சத்து 12 ஆயிரத்து 341, 222 கிராம் தங்கம், 241 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, காமாட்சி அம்மன் தேவஸ்தான காரியம் சுந்தரேசன், செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Kamachi Amman temple ,Kanchipuram ,
× RELATED வெளிமாநில வட்டாட்சியர்களை...