×

லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்

திருமலை: தெலங்கானாவில் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், போனகல் மண்டலம் கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் சந்தர்ராவ். இவர் தனது குடும்பத்தினர் 8 பேருடன் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடா அருகே குண்டாலாவில் உள்ள தேவாலயத்தில் முடிகாணிக்கை செலுத்த நேற்று காரில் புறப்பட்டார். சூர்யாபேட்டை மாவட்டம், கோதாடா அருகே சென்றபோது, அங்கு பழுதாகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மின்கல் வேகத்தில் கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த மாணிக்கம்மா, சந்தர்ராவ், ஸ்வர்ணா, லாஸ்யா, கிருஷ்ணாராவ் மற்றும் ஜெல்லா காந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

The post லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Telangana ,Chandra Rao ,Govindapuram, Ponakal Mandal, Kammam District, Telangana ,Andhra ,
× RELATED பேய் இருப்பதாக நம்பிய மாணவர்களின்...