×

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

சிவகிரி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஒப்பனையாள்புரம் கிராமத்தில் உள்ள பெரிய குளம் கண்மாய் அருகில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய ஒப்பனையாள்புரம் நடுத்தெருவை சேர்ந்த பெரிய முருகன் (48), மாடன் மகன் கடற்கரை (60), இந்திராகாலனி சங்குபுரம் பால்துரை (37) ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இரண்டு மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Periya Murugan ,Satiyalpuram Nadutheru ,Matan Makan Shihti ,Indirakalani ,Sangupuram ,Periya Kulam Kanmai ,Sivatiyalpuram ,Sivagiri, Tenkasi district ,Dinakaran ,
× RELATED சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது