×

முகூர்த்த தினம், வார இறுதிநாள் என்பதால் விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

விழுப்புரம்: முகூர்த்த தினம், வார இறுதிநாள் என்பதால் விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், தி.மலை, போளூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை 200, சனிக்கிழமை 250 என மொத்தம் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு -செய்து கொள்ளலாம் என விழுப்புரம் கோட்டம் அறிவித்துள்ளது.

The post முகூர்த்த தினம், வார இறுதிநாள் என்பதால் விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram division ,Mugurtha Day ,Villupuram ,Clambake ,Kallakurichi ,Cuddalore ,Chidambaram ,Vrudhachalam ,Thi.malai ,Villupuram district ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின் விழுப்புரம்,...