×

ஷர்மிளா தற்கொலை விவகாரம்: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கோட்டாட்சியர் விசாரணை..!!

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். கணவன் பிரவீன் உயிரிழந்ததை தாங்க முடியாமல் மனைவி ஷர்மிளா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஷர்மிளா உயிரிழந்தார். ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

The post ஷர்மிளா தற்கொலை விவகாரம்: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கோட்டாட்சியர் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Sharmila ,Rajiv Gandhi ,Chennai ,Praveen ,Revenue Commissioner ,Ibrahim ,Rajiv Gandhi Hospital ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.கவுடன்...