×

எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா

காரைக்குடி: கர்ப்பமாக்கி விட்டு எஸ்ஐ சேர்ந்து வாழ மறுப்பதாக கூறி, முன்னாள் பெண் போலீஸ் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அருகே கருத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமதி (35). இவர் காவலராக பணியாற்றியவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பணியாற்றி வரும் ஏற்கனவே திருமணமான ஒரு எஸ்ஐ உடன் பழக்கம் ஏற்பட்டது. காரைக்குடி வள்ளுவர் தெருவில் தனியாக வீடு எடுத்து சுமதியுடன் எஸ்ஐ குடும்பம் நடத்தி வந்துள்ளார். சுமதி தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ்ஐ தன்னுடன் வாழ மறுப்பதாகவும், அவரது குடும்பத்தார் மிரட்டுவதாகவும் கூறி சுமதி நேற்று திடீரென காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டிஎஸ்பி பிரகாஷ் கூறுகையில், ‘‘எஸ்ஐ மீது பெண் புகார் அளித்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா appeared first on Dinakaran.

Tags : dharna ,SI ,Karaikudi ,Sumathi ,Thampatti ,Dindigul ,
× RELATED தர்ணாவில் ஈடுபட்ட பாஜவினர் காதில்...