- அண்ணாமலை பட்டி
- பிரியங்கா பாதி
- வயநாடு
- காங்கிரஸ்
- பொது செயலாளர்
- பிரியங்கா காந்தி
- மோடி
- இந்திரகாந்தி
- தளி
- தின மலர்
வயநாடு: பெண்களின் தாலியைக் கூட காங்கிரஸ் விட்டுவைக்காது என பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்திருந்தார். ‘போரின்போது எனது பாட்டி இந்திராகாந்தி நகைகளை நாட்டுக்காக கொடுத்தார். என் தாய் தாலியை இந்த நாட்டிற்காக தியாகம் செய்தார்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் தேர்தல் பிரசாரம் செய்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, பிரியங்காவுக்கு பதிலளித்துள்ளார். அவர் பேசுகையில், ‘‘இந்திய சீன போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதாக கூறுகிறார்கள். 1962ல் சீன போர் நடந்ததற்கு காரணமே நேரு தான். இந்திரா காந்தி மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்து மக்களும் நகைகளை கொடுத்தனர். என் பாட்டி கூட நகையை கொடுத்திருக்கிறார்’’ என்றார்.
பாட்டி நகைகளை எல்லாம் கொடுத்துவிட்டதால் தான், சொத்து ஏதுமின்றி தகரப்பெட்டியோடு கோவைக்கு காலேஜில் சேர அண்ணாமலை வந்திருப்பாரோ என சமூக ஆர்வலர்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
The post பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை பாட்டியும் நகைகளை கொடுத்தாராம்: தகரப்பெட்டி ரகசியம் இதுதானா.. சமூக ஆர்வலர்கள் கேள்வி appeared first on Dinakaran.