×

வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு

குமாரபாளையம், ஏப்.25: குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கௌசல்யா மணி தலைமை தாங்கினார். குமாரபாளையம் கிளை நூலகர் மாரியம்மாள் புத்தகங்களின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார். கிளை நூலக வாசக வட்ட தலைவர் விடியல் பிரகாஷ், வாசிப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். மேலும், கடந்தாண்டு போல் இந்த ஆண்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாசிப்பு இயக்கம் நடைபெறும் எனவும், விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் கேட்டுக்கொண்டார். விழாவில் ஆசிரியர்கள் சாந்தி, கலைவாணி மற்றும் தீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,World Book Day ,West ,Colony Municipal Middle School ,Principal ,Kausalya Mani ,Mariammal ,Dinakaran ,
× RELATED இன்றும், நாளையும் மின் மயானம் இயங்காது