×

கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

அலங்காநல்லூர், ஏப். 25: அலங்காநல்லூர் அருகே, மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் சிவா (44).கொத்தனாரான இவர், எங்கு வேலைக்கு சென்றாலும் வீட்டிற்கு வரும்போது மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனை அவரது மனைவி மலர் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் அவர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் வேதனையடைந்த சிவா, வீட்டில் இருந்து வெளியேறி அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாலமேடு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்ததுடன்,அவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mason ,Alankanallur ,Siva ,Sannasi ,Valliyambatti ,Palamedu ,
× RELATED அலங்காநல்லூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை