×

சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்

ஜெருசலேம்: சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஜெட்டாவில் உள்ள கிங் பைசல் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனையில் அவர் இருப்பார் என்று அந்த நாட்டின் அரசு மீடியா தெரிவித்தது. கடந்த 2015ம் ஆண்டு மன்னராக பதவியேற்ற சல்மான் பின் அஜீஸ் இளவரசர் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசராக அறிவித்தார்.முகமது பின் சல்மான் தான் அரசு விவகாரங்களை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Saudi King Salman Hospital ,Jerusalem ,Saudi Arabia ,Salman bin Abdul Aziz ,King Faisal Hospital ,Jeddah ,Saudi King Salman ,Dinakaran ,
× RELATED மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி