×

சாவித்திரியின் வேடத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்: கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், பல்வேறு விஷயங்களைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி தமிழில் உருவாக்கப்பட்டநடிகையர் திலகம்’, தெலுங்கில் உருவாக்கப்பட்ட ‘மகாநடி’ ஆகிய படங்களில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தபோது பலர் என்னைக் கேலியும், கிண்டலும் செய்தனர். `கீர்த்தி சுரேசுக்கு நடிப்பு பற்றி என்ன தெரியும்? அவரால் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்துக்கு திரையில் மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா?’ என்று என் காதுபட கடுமையாக விமர்சனம் செய்தனர். ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது கூட இதுபோன்ற விமர்சனங்கள் எனது கவனத்துக்கு வந்தன.

ஆனால், என்னைப் பற்றிய அனைத்து கேலிகளையும், விமர்சனங்களையும், கிண்டல்களையும் அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, சாவித்திரியின் கதாபாத்திரத்தை என்னால் எவ்வளவு ஆழமாக மெருகேற்ற முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்தி நடித்தேன். பிறகு ‘மகாநடி’ படத்துக்காக எனக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதையறிந்து அனைவரும் வாயடைத்துப் போனார்கள். என்னைக் கேலியும், கிண்டலும் செய்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.
விமர்சனம் என்ற பெயரில் என்னைக் கடுமையாக விமர்சித்தவர்கள், எனக்கு மெசேஜ் அனுப்பி தங்கள் மன்னிப்பை ெவளியே யாருக்கும் தெரிந்துவிடாதபடி கேட்டுக்கொண்டனர். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, சாவித்திரியின் வேடத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். முதலில் அவரது வேடத்தில் நடிக்க நான் மறுத்ததையும் நினைவில் கொண்டு வந்தேன். திரையில் எனது நடிப்பைப் பார்த்த சாவித்திரியின் ரசிகர்கள், மனம் திறந்து என்னைப் பாராட்டினர். சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்தது, என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய சவாலாக இருந்தது.

ஆரம்பகாலத்தில் என்னைப் பற்றி வெளியான கிசுகிசுக்களைப் படித்துவிட்டு கண்கலங்கி இருக்கிறேன். அப்போது எனது அம்மாவும், நடிகையுமான மேனகா ஆறுதல் சொல்லி தேற்றுவார். அக்கா ரேவதியும் எனக்கு அட்வைஸ் செய்வார். நாளடைவில் என் மனதை மாற்றிக்கொண்டேன். இப்போது என்னைப் பற்றி எந்த தகவல் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக உருவாக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களை நான் படிப்பது இல்லை. அதுபற்றி யாராவது எனக்கு செல்போனில் பேசி ஞாபகப்படுத்தினால், அதை ஏன் நீங்கள் படிக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு சிரிக்கிறேன்.

அதனால் தற்போது யாரும் என்னிடம் அதுபற்றி பேசுவது இல்லை. தமிழ், ெதலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நான், இந்தியில் நடிக்க அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். எனக்குப் பொருத்தமான கேரக்டரும், நல்ல கதை கொண்ட படமும் கிடைத்தால் இந்தியில் நடிப்பேன். பாலிவுட் முன்னணி ஹீரோ ஷாருக்கான் என்றால் எனக்கு உயிர். அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தால், எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் சரி, அவற்றை எல்லாம் தாண்டி அவரது ஜோடியாக நடிப்பேன்’ என்றார்.

Tags : Savitri ,Keerthy Suresh ,Thilakam Savitri ,
× RELATED ரிவால்வர் ரீட்டாவை முடித்தார் கீர்த்தி சுரேஷ்