×

நியோமேக்ஸ் மோசடி: மேலும் 4 பேர் கைது

மதுரை: நியோமேக்ஸ் நிறுவனத்தின் மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம், பல்வேறு போலி வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களிடம் இருந்து 5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியது. இதுதொடர்பாக, நிறுவனத்தின் உரிமையாளர் கமலக்கண்ணன், பாஜ நிர்வாகி உட்பட 15க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தனர். இதன்பேரில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த இயக்குநர்களில் ஒருவரான சார்லஸ் மற்றும் இளையராஜா, தேனியைச் சேர்ந்த சஞ்சீவ், ராஜ்குமார் ஆகியோரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பின், நிறுவனர் தரப்பில் தமிழகம் முழுவதும் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களின் விபரம், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை உட்பட பல்வேறு விபரங்களை சேகரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post நியோமேக்ஸ் மோசடி: மேலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Neomax ,Neomax Financial Company ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் மோசடி வழக்கை 15 மாதத்தில்...