- ஆக்சர்
- ஸ்டப்ஸ்
- தலைநகரங்களில்
- புது தில்லி
- ரிஷாப் பந்த்
- ஆக்சர் பட்டேல்
- டிரிஸ்டன் ஸ்டப்ஸ்'
- தில்லி தலைநகரம்
- ஐபிஎல் லீக்
- குஜராத் டைட்டன்ஸ்
- அருண் ஜெட்லி…
- தின மலர்
புதுடெல்லி: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேப்டன் ரிஷப் பன்ட், அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.
அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பிரித்வி ஷா, ஜேக் பிரேசர் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர். அந்த அணியில் வார்னர் இடம் பெறவில்லை. அதிரடி காட்டிய பிரேசர் 23 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), பிரித்வி 11 ரன் எடுத்து சந்தீப் வாரியர் வீசிய 4வது ஓவரில் நடையை கட்டினர். ஷாய் ஹோப் 5 ரன் மட்டுமே எடுத்து வாரியர் வேகத்தில் ரஷித் கான் வசம் பிடிபட, டெல்லி 44 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில், அக்சர் படேல் – ரிஷப் பன்ட் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தது. அக்சர் படேல் 66 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி நூர் அகமது பந்துவீச்சில் சாய் கிஷோர் வசம் பிடிபட்டார்.
கடைசி கட்டத்தில் பன்ட் – ஸ்டப்ஸ் ஜோடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட… டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது. ரிஷப் பன்ட் 88 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்), ஸ்டப்ஸ் 26 ரன்னுடன் (7 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் சந்தீப் வாரியர் 3 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். நூர் அகமது 1 விக்கெட் வீழ்த்தினார்.
டெல்லி அணிக்கு கடைசி 3 ஓவரில் 67 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 20 ஓவரில் 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.
The post அக்சர் 66, பன்ட் 88*, ஸ்டப்ஸ் 26* கேப்பிடல்ஸ் 224 ரன் குவிப்பு appeared first on Dinakaran.