டெல்லி: சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற வீரரான எம்.எஸ். தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் வருண் ஆரோன் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.
“இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணியில் ஒரு வைல்டு கார்டு நுழைவை நாங்கள் பார்க்க முடிந்தது… எம்எஸ் தோனி,” என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வருண் ஆரோன் உற்சாகமாக தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவிக்கையில்; “எம்எஸ் தோனி டி20 உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதாகச் சொன்னால், அந்த வாய்ப்பை யாரும் மறுக்க மாட்டார்கள்… யாரும் கவலைப்பட மாட்டார்கள், யாருக்கும் பிரச்சனையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் தோனியின் அபாரமான ஆட்டத்தை எடுத்துரைத்தார். “எம்.எஸ். தோனியின் ஸ்ட்ரைக்-ரேட் 250க்கு மேல் உள்ளது, அவர் இன்னும் அவுட் ஆகாததால் சராசரியாக இல்லை,” என்று சேவாக் கூறியுள்ளார்.
இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, தோனி கிரிக்கெட்டுக்குத் திரும்பச் செய்வதில் உள்ள சவால்களை நகைச்சுவையாக ஒப்புக்கொண்டார், “எம்.எஸ். அவர் அமெரிக்காவிற்கு வந்தாலும், வேறு ஏதாவது செய்ய அவரை சமாதானப்படுத்துவது கடினம். அவர் இப்போது கோல்ஃப் விளையாடுகிறார்” என நகைசுவைகயாக தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் 2024ல், முன்னாள் இந்திய கேப்டன் தோனி, 6 இன்னிங்ஸ்களில் களமிறங்கி வெறும் 35 பந்துகளில் 91 ரன்கள்(260 ஸ்டிரைக் ரேட்) எடுத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் இன்னும் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை appeared first on Dinakaran.