×

கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கீழ்த்தரமான அரசியல்வாதி போல நடந்து கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே; தேர்தல் களத்தில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை கண்டு மோடி அச்சமடைந்து இருப்பதாக தெரிவித்தார். அச்சத்தின் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதாகவும், 400 தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ஊழல்வாதிகளை பாஜக-வில் இணைப்பது ஏன்? என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவை எப்படி ஒற்றுமையாக வைத்திருப்பது என்று தெரிந்துகொள்ள வரலாற்றை மோடி படிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், கீழ்த்தரமான அரசியல்வாதி போல மோடி நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். பாஜக-வின் வாக்குறுதிகளில் ஒன்றை கூட பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும், ஊழலை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டே 400க்கும் அதிகமான எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

 

The post கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Congress ,Mallikarjuna Kharge ,Thiruvananthapuram ,president ,Narendra Modi ,Modi ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…