×

வெப்ப அலை: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்

சென்னை: வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கரூர், கோவை ஆட்சியர்கள் வலியுறுத்தினர். மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

The post வெப்ப அலை: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Heat wave ,Collectors ,Chennai ,Karur ,Coimbatore ,
× RELATED மெக்காவில் சோகம்; 125 டிகிரி வெப்ப அலையால் ஹஜ் யாத்ரீகர்கள் 920 பேர் பலி