- திருவெரும்பூர்
- காட்டூர் பாப்பாக்குறிச்சி
- கிராம நிர்வாக அலுவலர்
- சண்முகசுந்தரம்
- காட்டூர் அண்ணாநகர்
- தின மலர்
திருவெறும்பூர், ஏப். 24: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அண்ணா நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பதாக காட்டூர் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் திருச்சி எஸ்பி தனி படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை செய்த பொழுது திருச்சி அரியமங்கலம் காமராஜர் தெருவை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் நஸ்ருதீன் (24) என்பவர் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்றுக் கொண்டிருந்த பொழுது கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 100 எம் ஜி அளவு கொண்ட டெபென்டால் என்ற 750 போதை மாத்திரைகளையும் மேலும் போதை ஊசி போட்டுக் கொள்வதற்கான 5 சிரஞ்சுகளையும் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். போதை மாத்திரையின் மதிப்பு மட்டும் ரூ 26 ஆயிரத்து 250 ஆகும் பின்னர் நசுருதீனை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் நசுருதீன் மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இதேபோன்று போதை மாத்திரை விற்ற வழக்கு உள்ளது.
The post திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்றவர் கைது appeared first on Dinakaran.