×

‘மங்கள நாயகி’ படம் வெளியாகி 43 ஆண்டுகள் நிறைவு

கடந்த 1978ல் இந்தியில் வெளியான படம், ‘சாஜன் பினா சுகாகன்’. எஸ்.குமார் எழுதிய கதைக்கு கமலேஷ்வர் திரைக்கதை எழுத, ஸ்வான் குமார் தக் இயக்கினார். நுதுன் சமந்தா, ராஜேந்திர குமார் நடித்தனர். குடும்பக்கதை கொண்ட இதை தமிழில் கிருஷ்ணன், பஞ்சு இணைந்து ‘மங்கள நாயகி’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினர். வி.குமார் இசை அமைத்தார். ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சரத்பாபு, சிவசந்திரன் நடித்தனர். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், ஷோபனா.

அப்போது அவருக்கு வயது 10. மறைந்த விஜயன் நடித்த ஒரு படத்தின் பெயர், ‘மங்கள நாயகி’. இப்படம் வேறு, அப்படம் வேறு. மேலும், நடிகை ஜெயசித்ராவை காதல் திருமணம் செய்த கணேஷ், ‘மங்கள நாயகன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது அவர் காலமாகி விட்டார். ஜெயசித்ரா, கணேஷ் தம்பதியின் மகன்தான், நடிகராக இருந்து இசை அமைப்பாளராக மாறிய அம்ரீஷ். கடந்த 1980 மார்ச் 21ம் தேதி ‘மங்கள நாயகி’ படம் திரைக்கு வந்தது. தற்போது 43 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

Tags : Kamleswar ,S. Kumar ,Swan Kumar Thak ,Nuthun Samantha ,Rajendra Kumar ,Krishnan ,Panchu ,
× RELATED டேரோட் – திரைவிமர்சனம்