×

தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம்

செங்கல்பட்டு, ஏப்.24: செங்கல்பட்டில் சித்ரா பவுர்ணமியையொட்டி, தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பரனுர் அருகே வீராபுரம் பகுதியில் தாந்தோணியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டால் கடன் தொல்லை தீரும், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று தாந்தோணி அம்மன் கோயில் 508 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செங்கழுநீ அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்நிகழ்வில், வீராபுரம் மகேந்திரா சிட்டி பரனுர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் மாரிமேல்கட்டம்மன் கோயிலின், 12ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள், பஜார் வீதியில் உள்ள முத்து பிள்ளையார் கோயிலிருந்து 501 பால்குடங்களுடன் நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க, தாரை தப்பட்டை வாதியங்களுடன், வாணவேடிக்கைகள் ஒலிக்க பஜார் வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர். பின்னர், மாரிமேல்கட்டம்மனுக்கு பக்தர்கள் வரிசையில் நின்றபடி, தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்தனர். இதில், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் மாரிமேல்கட்டம்மன் கோயிலின், 12ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள், பஜார் வீதியில் உள்ள முத்து பிள்ளையார் கோயிலிருந்து 501 பால்குடங்களுடன் நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க, தாரை தப்பட்டை வாதியங்களுடன், வாணவேடிக்கைகள் ஒலிக்க பஜார் வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர். பின்னர், மாரிமேல்கட்டம்மனுக்கு பக்தர்கள் வரிசையில் நின்றபடி, தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்தனர். இதில், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : 508 Balkuta Procession ,Thanthoniamman Temple ,Chengalpattu ,Chitra Poornami ,processions ,Danthoniamman temple ,Sami ,Veerapuram ,Paranur, Chengalpattu district ,procession ,
× RELATED செங்கல்பட்டு பகுதியில் சாலையில்...