×

கே.ஆர்.விஜயா நடித்த ‘படிக்காத பண்ணையார்’ படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு

சென்னையில் பிறந்து வளர்ந்தவர், கே.ஆர்.விஜயா. அவரது தந்தை ராமச்சந்திர நாயர், எம்.ஆர்.ராதா நடத்திய மேடை நாடகங்களில் நடித்தார். தனது மூத்த மகள் தெய்வானையை நடிகையாக்க வேண்டும் என்று முடிவு செய்து, கடந்த 1963ல் இந்த விஷயத்தைச் சாதித்தார். அந்த தெய்வானை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘கற்பகம்’ படத்தில் கே.ஆர்.விஜயா என்ற பெயரில் ஹீரோயினாக அறிமுகமானார். ஜெமினி கணேசன் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில், 22 வருடங்கள் கழித்து, அதாவது 1985ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘படிக்காத பண்ணையார்’ படத்தில் கே.ஆர்.விஜயா நடித்தார்.

இது அவர் நடித்த 200வது படமாகும். 1960ல் வங்காள மொழிப் படம் ஒன்றை தமிழில் உருவாக்க இயக்குனர் ஏ.பீம்சிங் முடிவு செய்தார். அப்படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி எழுதும் பொறுப்பை இயக்குனர் ஸ்ரீதரிடம் ஒப்படைத்தார். இப்படத்தைப் பார்த்த ஸ்ரீதர், தனது ரசனைக்குரியதாக இல்லை என்று மறுத்து, தனது உதவியாளர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். இதற்கு ஏ.பீம்சிங் முழுமையாக சம்மதித்தார். அவ்வாறு உருவான படம், ‘படிக்காத மேதை’. இப்படத்தின் பெயரில் ஒரு பகுதியை எடுத்து, 1985ல் இயக்கிய தனது படத்துக்கு ‘படிக்காத
பண்ணையார்’ என்று பெயர் சூட்டினார்.

‘படிக்காத மேதை’ கதையையொட்டி 1967ல் ஒரு கதை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ‘கண் கண்ட தெய்வம்’ என்ற படத்தை இயக்கினார். இதில் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, பத்மினி நடித்திருந்தனர். இப்படத்தை ரசிகர்கள் ஹிட்டாக்கினர். இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தை, ‘படிக்காத பண்ணையார்’ என்ற பெயரில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். ‘கண் கண்ட தெய்வம்’ படத்தில் எஸ்.வி.ரங்காராவ் நடித்த வேடத்தில், ‘படிக்காத பண்ணையார்’ படத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். பத்மினி ஏற்றிருந்த வேடத்தில் கே.ஆர்.விஜயா நடித்தார். வில்லனாக வி.கே.ராமசாமி நடித்தார்.

கே.ஆர்.விஜயாவை ஹீரோவாக அறிமுகப்படுத்திய கே.எஸ்.கோபாலகிருஷ்ணனே அவர் நடித்த 200வது படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1985 மார்ச் 23ம் தேதி திரைக்கு வந்த ‘படிக்காத பண்ணையார்’ படம், 38 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது. கே.ஆர்.விஜயா நடித்த 100வது படமான ‘நத்தையில் முத்து’ படத்தை இயக்கியவரும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த 1973 அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வந்தது.

Tags : KR ,Chennai, ,KR Vijaya ,Ramachandra Nair ,Radha ,Deivanai ,KS Gopalakrishnan… ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்...