×
Saravana Stores

சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஐகோர்ட் வேதனை..!!

சென்னை: சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் இடையிலான பிரச்சனை காரணமாக கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்தது. தமிழ்நாடு அரசு பிறப்பித்த தேர்தல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த ஓராண்டாக சென்னை பல்கலை. துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது என்பது மோசமான நிலை. பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகார அமைப்புகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஐகோர்ட் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : University of Chennai ,ICourt ,Chennai ,ECtHR ,Madras High Court ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...