×
Saravana Stores

இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு: பனிப்பாறைகள் உருகுவது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் இமயமலை பனிப்பாறைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் உருகி வருவதாக இஸ்ரோ அதிர்ச் தகவலை வெளியிட்டுள்ளது. கோடை காலம் தொடங்கி நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆந்திர மாநிலம் கடப்பா மற்றும் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ஆகிய இடங்களில் நேற்று தலா 110.84 டிகிரி பாராசூட் வெப்பம் வாட்டியது.

மத்திய பிரதேசம், குஜராத், ஒடிசா, ஆந்திரா, மத்திய மஹாராஷ்டிரா, பீகார்,ஜார்க்கண்ட் மாநிலங்களில் அடுத்த 20 நாட்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் 4 முதல் 6 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வெப்ப அலை குறித்து தொலைக்காட்சி நேரலையில் வானிலை குறித்த செய்தியை வசித்து கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர் லோப முத்ரா சிம்ஹா கோடையின் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்தார்.

செய்தி அரங்கத்தில் நிலவிய அதிக வெப்பம் காரணமாக தனது ரத்த அழுத்தம் குறைந்து மயங்கி விழுந்ததாக லோபா முத்ரா தெரிவித்தார். ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிஜூ ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அரூப் பட்நாயக் கோடை வெயிலின் கொடுமை தாங்காமல் வாகனத்திலேயே சரிந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த பறவைகள் அங்குள்ள பறவைகளுக்கான மருத்துவமனையில் சிகிச்சைகாக குவிந்து வருகின்றன. கொளுத்தும் வெயிலின் கொடுமை தாங்காமல் மக்கள் வெளியே வர அஞ்சி வீடுகளுக்குள் முடங்கும் நிலையேற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வர வேண்டிய சூழலிலும், முகத்திலும், தலையிலும் ஈரத்துணிகளுடன் செல்வதாகவும் அதையும் தாண்டி வெயில் தாக்கம் அதிகரிக்கும் போது நிழலை தேடி ஓட வேண்டி உள்ளதாகவும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே இமயமலையின் பனி மற்றும் பனிப்பாறைகளை ஆய்வு செய்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முன் எப்போதும் இல்லாத அளவு பனி பாறைகள் உருகி வருவதாக தெரிவித்துள்ளது. இந்திய இமயமலை பகுதி முழுவதும் உள்ள பனிப்பாறைகள் பல தஸப்தாங்களாக வேகமாக உருகி வருகின்றன. இதன் விளைவாக பனிப்பாறை ஏரிகளின் அளவு குறிப்பிட தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரோவின் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

The post இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு: பனிப்பாறைகள் உருகுவது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : heat wave ,India ,ISRO ,Delhi ,Isero ,Himalayan glaciers ,heat ,Wave ,
× RELATED ‘வெப்ப அலை பாதிப்பு’ மாநில பேரிடராக...