×

தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால குடிநீர் பற்றாக்குறை: தலைமை செயலர் ஆலோசனை

சென்னை: தடையில்லாமல் குடிநீர் விநியோகம், கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக நடைபெறும் ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்க உள்ளனர். வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் இருப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

The post தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால குடிநீர் பற்றாக்குறை: தலைமை செயலர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chief Secretary ,Shivdas Meena ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...