×

தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் ‘சின்ராசு மகன் ஜூனியர் சக்திவேல்’

விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, பிரியா ராமன், மணிவண்ணன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம், ‘சூர்யவம்சம்’. இதில் சக்திவேல், சின்ராசு என்ற பெயர்களில் இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்தார். அதிலும் தேவயானி சமைக்கும் இட்லி உப்புமா, பெண்கள் மத்தியில் இன்றளவும் பேமஸ். இப்படத்தில் சின்ராசு மகன் ஜூனியர் சக்திவேல் கேரக்டரில் நடித்தவர், ஹேமலதா. அந்த வேடத்தில் நடித்திருந்தது சிறுவன் அல்ல, சிறுமி.

இப்படம் தவிர, விக்ரமன் இயக்கிய ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ராசு மதுரவன் இயக்கிய ‘பூமகள் ஊர்வலம்’, பாலா இயக்கிய ‘சேது’, செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ உள்பட பல படங்களில் நடித்திருந்த ஹேமலதா, டி.வியிலும் பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் போட்டோக்களை ஹேமலதா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும், ‘அவரா இவர்?’ என்று ஆச்சரியப்படுகின்றனர்.

Tags : Vikraman ,Sarathkumar ,Devayani ,Radhika ,Priya Raman ,Manivannan ,Sakthivel ,Sinrasu ,Devyani ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...