×

தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி

நிலக்கோட்டை, ஏப்.23: தேசிய அளவிலான 14-வயதுக்கு உட்பட்டோருக்கான ஆல் இந்திய பெடரேசன் ரோல்பால் போட்டி டேராடூனில் வரும் ஏப்.25 முதல் 28 வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அணி சார்பில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி சின்னாளபட்டி தனியார் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகள் டேராடூனில் நடைபெறவிருக்கும் 14-வயதுக்குட்பட்டோருக்கான ஆல் இந்தியா பெடரேஷன் ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜம்முகாஷ்மீர் உட்பட 10க்கும் மேற்பட்ட மாநில அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இந்த நிலையில் தமிழக அணி சார்பில் சர்வதேச நடுவர் பிரேம்நாத் தலைமையில் 5-பெண்கள் 7-ஆண்கள் என இரு பிரிவாக இந்த ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் தங்கலெட்சுமி, புனிதா, கல்யாணராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,National Rollball Tournament ,Nilakottai ,National Under-14 All India Federation Rollball Tournament ,Dehradun ,national rollball ,Dinakaran ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...