×
Saravana Stores

சில்லி பாயின் ட்…

* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடக்கும் முதல் கட்ட அரையிறுதி முதல் ஆட்டத்தில் ஒடிஷா எப்சி – மோகன் பகான் எஸ்ஜி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளதில் மோகன் பகான் 5-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. எஞ்சிய 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. நடப்பு தொடரில் மோதிய 2 ஆட்டங்களும் டிராவில் முடிந்தன (2-2 மற்றும் 0-0).
* ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பன்ட் இடம் பெற வேண்டும் என சவுரவ் கங்குலி, ரிக்கி பான்டிங் தெரிவித்துள்ளனர்.
* காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் (ஆஸி.), ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ ஆலோசனைக்காக ஏப்.12ம் தேதி பெர்த் சென்ற மார்ஷ் , தொடர்ந்து அங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
* ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறி நடுவருடன் வாக்குவாதம் செய்த ஆர்சிபி வீரர் விராத் கோஹ்லிக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
* மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) விலகியுள்ளார்.
* ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் பெர்லினில் நடைபெற உள்ள லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் அரோப்பிய அணிக்காக களமிறங்க உள்ளதை உறுதி செய்துள்ளார்.
* 100வது வாரமாக இகா நம்பர் 1
டபுள்யு.டி.ஏ மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (22 வயது) தொடர்ந்து 100வது வாரமாக நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துள்ளார். அவர் 10,560 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். முன்னதாக ஸ்டெபி கிராப்(377 வாரம்), மார்டினா நவ்ரத்திலோவா (332), செரீனா வில்லியம்ஸ் (319), கிறிஸ் எவர்ட் (260), மார்டினா ஹிங்கிஸ் (209), மோனிகா செலஸ் (178), ஆஷ்லி பார்டி (121), ஜஸ்டின் ஹெனின் (117 வாரம்) ஆகியோர் நம்பர் 1 இடத்தில் அதிக வாரங்கள் நீடித்து சாதனை புரிந்துள்ளனர். நடப்பு தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 7848 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அமெரிக்க நட்சத்திரம் கோகோ காஃப் (7258), போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் தொடர் உள்பட நடப்பு சீசனில் 3 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள கஜகஸ்தானின் எலனா ரைபாகினா (6293), ஜெஸ்ஸிகா பெகுலா (4870, அமெரிக்கா) அடுத்த இடங்களிலும் உள்ளனர்.

The post சில்லி பாயின் ட்… appeared first on Dinakaran.

Tags : Odisha FC ,Mohan Baghan SG ,ISL football ,Mohan Bagan ,Dinakaran ,
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து சீசன் 11: சென்னை – முகமதன் இன்று மோதல்