- இந்தியா கூட்டணி
- Mutharasan
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- எம்பி சுப்பராயன்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- தின மலர்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், எம்பி சுப்பராயன் உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். பின்னர் முத்தரசன் அளித்த பேட்டி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடுவார்கள். சென்ற நாடாளுமன்றத் தேர்தல் போன்றே இந்த தேர்தலிலும் தோழமை கட்சிகளை சிறந்த முறையில் வழிநடத்தி சென்ற திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி செலுத்தினோம். அப்போது அவரும் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். இது வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.
ஜூன் 4ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜ கூட்டணி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜகவினர் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் செய்த நலத்திட்டங்களை கூறி வாக்குச்சேகரிக்காமல் மத கலவரத்தை ஏற்படுத்தினர். பாஜவினருக்கு நாட்டின் நலன் மீதும், மக்களின் நலன் மீதும் எந்தவித அக்கறையும் இல்லை. மதரீதியான குழப்பங்களை ஏற்படுத்தி, பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். குறுக்குவழி அரசியலில் பாஜ ஒருபோதும் வெற்றி பெறாது.
The post 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி appeared first on Dinakaran.