×

‘கோபுர வாசலிலே’திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவு

கடந்த 1990ல் மலையாளத்தில் ‘பாவம் பாவம் ராஜகுமாரன்’என்ற படம் வெளியானது. கமல் இயக்க, ஸ்ரீனிவாசன் திரைக்கதை எழுதினார். ஸ்ரீனிவாசன், ரேகா நடித்தனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தை கடந்த 1991ல் ‘கோபுர வாசலிலே’ என்ற பெயரில் பிரியதர்ஷன் ரீமேக் செய்து இயக்கினார். இளையராஜா இசை அமைத்தார். கார்த்திக், பானுப்பிரியா நடித்தனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்தார்.

கடந்த 1991 மார்ச் 22ம் தேதி வெளியான ‘கோபுர வாசலிலே’ படம், தற்போது 32 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், பல்வேறு மொழிகளில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவரும், பல படங்களை தயாரித்தவருமான பிரியதர்ஷன், தனது இயக்கத்தில் உருவாகும் 100வது படத்தை மலையாளத்தில் இயக்குகிறார். இதில் அவரது ஆஸ்தான ஹீரோ மோகன்லால் நடிக்கிறார்.

Tags : Kamal ,Srinivasan ,Rekha ,Priyadarshan ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar