×

சேலம் விமானசேவை நேர மாற்றம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. சென்னை-சேலம் இடையே கூடுதல் விமான சேவையை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நாள்தோறும் காலை 10.35 மணியளவில் இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, காலை 11.40 மணிக்கு செல்கிறது. பின்னர், அங்கிருந்து அதே விமானம் மதியம் 12.40 மணியளவில் புறப்பட்டு, மதியம் 1.50 மணியளவில் சென்னை வந்து சேருவது வழக்கம். இந்த விமானத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால், சென்னை-சேலத்துக்கு இடையே கூடுதல் விமான சேவையை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், சேலத்தில் இருந்து மதியம் சென்னைக்கு புறப்பட்டு வரும் இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் நேரம், இன்று முதல் மாலை நேரத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, சேலத்தில் இருந்து மாலை 5 மணியளவில் புறப்படும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 6 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான முனையத்துக்கு வந்து சேரும். இதனால், மதிய நேரத்தில் சேலம்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு, மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விமானப் பயணிகள் கூறுகையில், சேலம்-சென்னை இடையே மதிய நேரத்தில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். அதோடு, சென்னை-சேலம் இடையே கூடுதலாக மாலை நேரத்தில் மற்றொரு விமான சேவையைத் துவக்க வேண்டும். ஏற்கெனவே கொரோனா காலத்துக்கு முன், கடந்த 2019ம் ஆண்டில் சென்னை-சேலம் இடையே காலை, மாலை நேரங்களில் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. அதேபோல், மீண்டும் கூடுதல் விமான சேவையை இயக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

The post சேலம் விமானசேவை நேர மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Meenambakkam ,Chennai Airport ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் உற்சாக...