×

மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெற்றுவிட பா.ஜ.க. முயற்சி: முத்தரசன் குற்றசாட்டு

சென்னை: பாஜக மதரீதியாக பிரச்சனைகளை கிளப்பி வாக்குகளை பெறலாம் என்கிற குறுக்கு வழியை தேடிக் கொண்டிருக்கிறது என்று முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இந்த நிலையில், பாஜக மதரீதியான ஒரு மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெற்றுவிட முயற்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜக, 10 ஆண்டு கால சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்யாமல் மதரீதியாக பிரச்சனைகளை கிளப்பி வாக்குகளை பெறலாம் என்கிற குறுக்கு வழியை தேடிக் கொண்டிருக்கிறது. ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இந்தியாவின் ஒரு மாற்று ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜக கூட்டணி என்பது 3-வது முறையாக ஆட்சி அமைக்க சாத்தியமல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பாஜக மதரீதியான ஒரு மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெற்றுவிட முயற்சிக்கிறது. குறுகிய சிந்தனையோடு பிரதமர் செயல்படுகிறார்; அதனை மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார்கள் என்று தெரிவித்தார்.

The post மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெற்றுவிட பா.ஜ.க. முயற்சி: முத்தரசன் குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Mutharasan ,CHENNAI ,Lok Sabha elections ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...