×

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் ஆர்.டி.ஈ. மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோர்களின் குழந்தைகளுக்கு என LKG அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

இன்று முதல் மே.20-ம் தேதி வரை www.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்ததும் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பப்படும். அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

The post தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,RTE ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் RTE சேர்க்கை இன்று தொடக்கம்