×

45 வருடங்களை நிறைவு செய்த ‘நிழல் நிஜமாகிறது’ திரைப்படம்

கடந்த 1978 மார்ச் 24ம் தேதி திரைக்கு வந்த ‘நிழல் நிஜமாகிறது’ படம், 45 வருடங்களை நிறைவு செய்துள்ளது. கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுமித்ரா, சரத்பாபு, ஷோபா நடித்திருந்த இப்படத்தில் ஷோபா அறிமுகமானார். மலையாளத்தில் வெளியான ‘அடிமகள்’ (அடிமைகள்) என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இதை தமிழில் இயக்குவதற்கு முன்பு, தெலுங்கில் ‘சிலக்கம்மா செப்பண்டி’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். எரங்கி சர்மா இயக்கிய இப்படம், ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சங்கீதா, ஸ்ரீபிரியா, லட்சுமிகாந்த் நடித்திருந்தனர். இப்படத்தின் அறிமுகக் காட்சியில், ரஜினிகாந்த் சிகரெட்டை ஸ்டைலாக மேலே தூக்கிப்போட்டு புகைக்கும் காட்சி இடம்பெற்றது.

கமல்ஹாசன் முதலில் ஹீரோவாக நடித்த படம், மலையாளத்தில் வெளியான ‘கன்னியாகுமரி’. அதுபோல், ரஜினிகாந்த் முதலில் ஹீரோவாக நடித்த படம், தெலுங்கில் வெளியான ‘சிலக்கம்மா செப்பண்டி’. இப்படம் 1977 ஆகஸ்ட் 13ம் தேதி வெளியானது. இதற்குப் பிறகே ‘அடிமகள்’ என்ற படத்தை கே.பாலசந்தர் தமிழில் ரீமேக் செய்து இயக்கினார். பம்மன் எழுதிய ஒரு நாவலின் அடிப்படையில் ‘அடிமகள்’ உருவானது. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கினார். அப்போது மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த சத்யன், ஷீலா, சாரதா நடித்திருந்தனர்.

பொட்டன் என்ற அப்பாவி வேடத்தில் பிரேம் நசீர் நடித்தார். ரஜினிகாந்த் தெலுங்கில் ஹீரோவாக நடித்து 10 மாதங்கள் கழித்து, அதாவது 1978 ஜூன் 8ம் தேதி ‘பைரவி’ படம் திரைக்கு வந்தது. கலைஞானம் தயாரிக்க, எம்.பாஸ்கர் இயக்கினார். தமிழில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த முதல் படம் ‘பைரவி’ என்று சொல்லலாமே தவிர, மற்றபடி அவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் என்ற பெருமை ‘சிலக்கம்மா செப்பண்டி’ என்ற தெலுங்குப் படத்தையே சேரும்.

Tags : Shobha ,K. Balachandar ,Kamal Haasan ,Sumitra ,Sarathbabu ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...