×

இந்தியாவில் 65 வயதுக்கு மேல் உள்ள தனிநபர் மருத்துவ காப்பீடு பெறலாம்: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

சென்னை: இந்தியாவில் 65 வயதுக்கு மேல் உள்ள தனிநபர் மருத்துவக் காப்பீடு பெறலாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவக் காப்பீடுகள் பல வகையில் மக்களுக்கு உதவியாக உள்ளது. தற்போது பல நிறுவனங்கள் பல்வேறு வகையில் மருத்துவ காப்பீடு வழங்கி வருகிறது. ஆனால் 65 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு இது வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே காப்பீடு எடுக்க முடியும் என்பதை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 65 வயதுக்கு மேல் உள்ள தனிநபர் மருத்துவக் காப்பீடு பெறலாம். மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக காப்பீடு திட்டங்களை மருத்துவக் காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.

மேலும் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பிரத்யேக சேனல்களை உருவாக்க காப்பீடு வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இந்தப் புதிய முடிவு, இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்துவதற்கும், காப்பீட்டு வழங்குநர் நிறுவனங்களைத் தங்கள் சலுகைகளைப் பன்முகப்படுத்த ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவைதவிர மருத்துவக் காப்பீடு எடுப்பவர்கள் சலுகைகளை பெறுவதற்கான காத்திருப்பு காலமும் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீடு எடுப்பவர்கள் உடனடியாக எந்த சலுகைகளையும் பெறமுடியாது, குறிப்பிட்ட காலம் வரை காத்திருக்க வேண்டும். இது ஒவ்வொரு காப்பீடுக்கும் வித்தியாசப்படும். இப்புதிய மாற்றங்களை இந்த மாதம் முதல் செயல்படுத்த இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post இந்தியாவில் 65 வயதுக்கு மேல் உள்ள தனிநபர் மருத்துவ காப்பீடு பெறலாம்: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Insurance Regulatory Commission of India ,CHENNAI ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...