×
Saravana Stores

தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: மாணவர்களும் ஆசிரியர்களும் ஓய்வு எடுப்பதற்காகவும் கடும் வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காப்பதற்காகவும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவலாக 105 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை இருந்து வருகிறது. முதியவர்களும் பொதுமக்களும் நோயாளிகளும் இதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சில தனியார் பள்ளிகள் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களை அழைத்து தனியாகச் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெற்றோர்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இது மாணவர்களின் மீது உளவியல் சார்ந்த மனஅழுத்தத்தை உருவாக்கும். கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவதற்காக குறுக்கு வழியில் தனியார் பள்ளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. எனவே பள்ளிக்கல்வித்துறை தலையிட்டுச் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,CHENNAI ,Humanity People's Party ,President ,MH Jawahirullah ,MLA ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெற்று ஆரவாரமே வெற்றியாகி விடாது.....