×

பத்தனம்திட்டா தொகுதியில் மாமியாரின் ஓட்டை போட்ட மருமகள்: 3 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் 85 வயதுக்கு மேல் ஆனவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு அதிகமாக உடல் ஊனமுற்றவர்களின் ஓட்டுகள் அவர்களது வீடுகளில் சென்று பெறப்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு உபகரணங்களுடன் வீடுகளுக்கு சென்று ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பத்தனம்திட்டா தொகுதியிலுள்ள ஆரன்முளாவை சேர்ந்த 92 வயதான அன்னம்மா என்பவரது ஓட்டை பதிவு செய்வதற்காக தேர்தல் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் கடந்த 6 வருடங்களுக்கு முன்பே அவர் இறந்து விட்டார். இவரது ஓட்டை அன்னம்மாவின் அதே பெயர் கொண்ட மருமகள் போட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு இடதுசாரி கூட்டணி சார்பில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் நடத்திய விசாரணையில் அன்னம்மாவின் பெயரில் கள்ள ஓட்டு போட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அன்னம்மாவின் வீட்டுக்கு வாக்குப்பதிவுக்காக சென்ற அம்பிளி தேவி, தீபா மற்றும் கலா எஸ்.தாமஸ் ஆகிய 3 தேர்தல் அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்படும் என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் தெரிவித்தார்.

The post பத்தனம்திட்டா தொகுதியில் மாமியாரின் ஓட்டை போட்ட மருமகள்: 3 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Pathanamthita ,Thiruvananthapuram ,Kerala ,Naughter ,
× RELATED ஷிகெல்லா நோய் பாதித்து 8 வயது சிறுமி பலி: கேரளாவில் பரிதாபம்